ஞாயிறு, 17 மார்ச், 2013



கிதாப் ஷறஹுஸ் ஸுன்னாஹ்
இமாம் அல்-பர்பஹாரீ

-ஆங்கிலத்தில்: அபூ தல்ஹா தாவூத் பர்பன்க்

-தமிழில்: ஸலஃபியூன்-அதிரை
 
(முக்கியக் குறிப்பு: இது கருத்துகளின் மொழிப்பெயர்ப்பே, கருத்து மற்றும் மொழிப் பிழைகள் (ஆதாரங்களுடன்) சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக்கொள்ளப்படும்)

1. அஸ்-ஸுன்னாஹ்வே இஸ்லாம், இஸ்லாமே அஸ்-ஸுன்னாஹ்.
இமாம் அல்-பர்பஹாரீ (ரஹிமஹுல்லாஹ் ) கூறினார்கள்:
நம்மை இஸ்லாத்தின்பால் வழிகாட்டி, அதில் நமக்கு அருள் செய்து மேலும் நம்மை மிகச்சிறந்த சமுதாயத்தில் ஆக்கிய அல்லாஹ் வுக்கே எல்லாப் புகழும். எனவே எது அவனுக்கு பிரியமானது மற்றும் பொருந்திக் கொள்ளக்கூடியதோ அவற்றை வழங்கக்கோரியும் எது அவனுக்கு வெறுப்புக்கு மற்றும் கொவத்திற்குரியதோ அவற்றை விட்டுப் பாதுகாக்கக் கோரியும் அவனிடம் வேண்டுகிறோம்.
 அறிந்துகொள்ளுங்கள் இஸ்லாமே ஸுன்னாஹ்வாகும், ஸுன்னாஹ்வே இஸ்லாமாகும் மேலும் இவற்றில் ஒன்றை இழந்து (இல்லாமல்) மற்றொன்றை நிலைநாட்ட முடியாது.