கிதாப் ஷறஹுஸ் ஸுன்னாஹ்
இமாம்
அல்-பர்பஹாரீ
-ஆங்கிலத்தில்: அபூ தல்ஹா தாவூத் பர்பன்க்
-தமிழில்: ஸலஃபியூன்-அதிரை
(முக்கியக் குறிப்பு: இது கருத்துகளின் மொழிப்பெயர்ப்பே, கருத்து மற்றும் மொழிப் பிழைகள் (ஆதாரங்களுடன்) சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக்கொள்ளப்படும்)
1. அஸ்-ஸுன்னாஹ்வே இஸ்லாம், இஸ்லாமே அஸ்-ஸுன்னாஹ்.
இமாம் அல்-பர்பஹாரீ (ரஹிமஹுல்லாஹ் ) கூறினார்கள்:
நம்மை இஸ்லாத்தின்பால் வழிகாட்டி, அதில் நமக்கு அருள் செய்து மேலும் நம்மை மிகச்சிறந்த சமுதாயத்தில் ஆக்கிய அல்லாஹ் வுக்கே எல்லாப் புகழும். எனவே எது அவனுக்கு பிரியமானது மற்றும் பொருந்திக் கொள்ளக்கூடியதோ அவற்றை வழங்கக்கோரியும் எது அவனுக்கு வெறுப்புக்கு மற்றும் கொவத்திற்குரியதோ அவற்றை விட்டுப் பாதுகாக்கக் கோரியும் அவனிடம் வேண்டுகிறோம்.
அறிந்துகொள்ளுங்கள் இஸ்லாமே ஸுன்னாஹ்வாகும், ஸுன்னாஹ்வே இஸ்லாமாகும் மேலும் இவற்றில் ஒன்றை இழந்து (இல்லாமல்) மற்றொன்றை நிலைநாட்ட முடியாது.
குறிப்புகள்:
1. நபி(ஸல்) கூறினார்கள், “யார் என்னுடைய ஸுன்னாஹ்விலிருந்து திரும்பிவிட்டாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை.” (அல்-புஹாரீ, முஸ்லிம்)
அல்லாஹ் வின் தூதர்(ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா
கூறினார்கள், “ என்னுடைய சமுதாயத்தவர் அனைவரும் சுவர்க்கம் நுழைவர் மருத்தவரைத்
தவிர” (அவர்களிடம் (ஸல்))கேட்கப்பட்டது “யார் மறுப்பார் ?” அவர்(ஸல்) பதிலளித்தார்கள்,”
எவரெல்லாம் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ சுவர்க்கம் நுழைவார் மற்றும் எவரெல்லாம்
எனக்குக் கீழ்ப்படியவில்லையோ அவர் மறுத்தவர்” (அல்-புஹாரீ)
இமாம் அஸ்-ஸுஹ்ரீ (புகழ் பெற்ற தாபி’யீ)
கூறினார்கள்,” நமக்கு முன் வந்த அறிஞர்கள்,’ ஈடேற்றம் ஸுன்னாஹ்வை
பற்றிப்பிடிப்பதில் உள்ளது’, என்று கூறக்கூடியவர்களாக இருந்தனர்” (ஸுனன்
அத்-தாரிமீ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக